கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் பகுதியில் இருந்து டவுன்ஹால் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது.
முருகவேல் என்ற ஓட்டுநர் இப்பேருந்தை ஓட்டி வந்து உள்ளார். இந்நிலையில் வேடப்பட்டி அருகே எதிர் திசையில் மாதம்பட்டி நோக்கி அதி வேகமாக வந்து கொண்டு இருந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தின் போது அவ்வழியே சென்ற பழ வியாபாரி சுப்பிரமணி என்பவர் மீதும் பேருந்து மோதி சுப்பிரமணி காயம் அடைந்தார். இவ்விபத்தில் காரை ஓட்டி வந்த தேனமநல்லூர் பகுதியைச் சேர்ந்த கோபிசங்கர் என்பவர் படுகாயம் அடைந்தார்.
இதை அடுத்து அப்பகுதி மக்கள் கோபி சங்கர் மற்றும் பழ வியாபாரி சுப்பிரமணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடவள்ளி காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விபத்துக்கு உள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே விபத்து சம்பவம் தொடர்பான அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.