அரசு பேருந்து ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி : பதறிய பயணிகள்… கைக்கோர்த்த மனிதநேயம்.. நெகிழ்ச்சி சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan3 March 2023, 9:34 am
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து காரைக்குடிக்கு 52 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை மதுரை கடச்சநேந்தலை சேர்ந்த கிருபாகரன் (வயது 36) ஒட்டி வந்தார்.
பேருந்து உலுப்பகுடி பேருந்து நிலையம் அருகே வரும்போது ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சி வலி ஏற்பட்டுள்ளது. உடனே சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் கிருபாகரன் பேருந்தை சாலையோரமாக நிறுத்தியுள்ளார்.
உடனே பயணிகளும், நடத்துனரும் அவரை ஆசுவாசப்படுத்தி அருகே இருந்த உலுப்பக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த உறவினர்கள் ஓட்டுனரை மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் ஓட்டுநர் உடனே பேருந்தை பொறுமையாக இயக்கி சாலையோரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.