சிறுமியிடம் சில்மிஷம்… பாலியல் தொல்லை கொடுத்த அரசு பேருந்து ஓட்டுநர் : அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2023, 10:39 am

பழனி அருகே ஓளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி, அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

நாராயணசாமி தனது வீட்டின் அருகே வசித்து வந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சிறுமியின் பெற்றோர் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரை விசாரித்த மகளிர் காவல் நிலைய போலீசார் ஓட்டுநர் நாராயணசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பழனியில் பெற்றோர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…