Categories: தமிழகம்

தரையில் படுத்து அழுது புரண்ட அரசு பேருந்து நடத்துநர் : பயணிகள் மோதலால் அரசு பேருந்து ஊழியர்களின் பரிதாபம்!!!

திருப்பூரில் இருந்து மதுரை, நான்குநேரி வழியாக நாகர்கோவிலுக்கு மதுரை மண்டலத்தை சேர்ந்த அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் நெல்லை புதிய பஸ்ஸ்டாண்டிற்கு வந்ததும் நாகர்கோவில் செல்லும் பயணிகளை மட்டுமே நடத்துனர் அந்த பஸ்ஸில் ஏற்றி உள்ளார.

அப்போது நாங்குநேரிக்கு செல்லும் சில பயணிகளும் அதே பஸ்சில் ஏறி உள்ளனர். அதற்கு இந்த பஸ் நான்குநேரிக்கு போகாது என வழக்கம் போல நடத்துனர் கூறவும், அதற்கு பயணிகள் இது வழக்கமாக நான்குநேரி ஊருக்குள் வந்து செல்லும் பஸ் தான் எனக்கூறி இறங்க மறுத்துள்ளனர்.

இதனை அடுத்து வேறு வழி இல்லாமல் நான்குநேரி பயணிகளுக்கும் நடத்துனர் டிக்கெட் கொடுத்துள்ளார். இதனை அடுத்து நாகர்கோவிலுக்கு சென்ற பயணிகள் இருவர் இது 1 டு 1 பஸ் இடையில் உள்ள ஊர் பயணிகளை எப்படி ஏற்றலாம் என நடத்துனரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நான்குநேரி பயணிகளுக்கும், நாகர்கோவிலில் சேர்ந்த அந்த இரண்டு பயணிகளுக்கும் இடையே பஸ்ஸில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பஸ் நான்குநேரி ஊருக்குள் கொண்டு வந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயணிகளை இறக்கி விட்டனர். இதனை அடுத்து நாகர்கோவில் பயணிகள், நான்குநேரி பயணிகளை அவதூறாக பேசியதாக கிடைத்த தகவலின் பேரில் நான்குநேரி பஸ்ஸ்டாண்டிற்குள் அந்த பஸ்ஸை வழிமறித்து அங்கிருந்து பொதுமக்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து நான்குநேரி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து அங்கு வந்த நான்குநேரி போலீசார் நான்குநேரி பயணிகளை அவதூறாக பேசிய இரு பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு வந்த போலீசாரிடம் தெரிவித்தனர்.

பிரச்சனை பெரியதானதால் அந்த பஸ்ஸை ஓரமாக நிறுத்துவதாக கூறிவிட்டு ஓட்டுனர் பஸ்சை நாகர்கோவில் நோக்கி ஓடி சென்றார். இதனால் போலீசாரும், பொதுமக்கள் பைக்கில் பின்னால் துரத்தி சென்று அரை கிலோ மீட்டர் தொலைவில் அந்த பஸ்ஸை தடுத்து நிறுத்தினர்.

அப்போது அங்கு வந்த நாங்குநேரி எஸ். ஐ., கணபதி அந்த பஸ்ஸின் நடத்துனர் முத்தையாவிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். அதனை பொதுமக்கள் சிலர் செல்போனில் படம் எடுத்ததை பார்த்த நடத்துனர் என்னை படம் எடுக்காதீர் எனக் கூறிவிட்டு போலீசார் முன்னிலையில் கூச்சலிட்டு தரையில் படுத்து உருண்டு ரகளையில் ஈடுபட்டார்.

இதனால் ஏற்பட்ட படபடப்பில் கலக்கமடைந்த அவர் தண்ணீர் தண்ணீர் என்று கேட்டு கூச்சலிட்டார். அப்போது அருகில் உள்ள வீட்டில் இருந்து அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவினர்.

உயர் அதிகாரிகள் அரசு அனுமதி இல்லாத பைபாஸ் ரைடர் 1 டு 1 என பல பெயர்களில் கூடுதல் கட்டணங்களை வசூலிக்க சொல்லி வாய்மொழியாக உத்தரவிடுவதாகவும், பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதில் சிக்கி தினமும் நிம்மதியின்றி பணி செய்வதாக அவர் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை தூக்கி தண்ணீர் கொடுத்து சமாதானப்படுத்தினர். மேலும் என்னால் நிற்க முடியவில்லை என்று கூறியதும் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறியதை நடத்துனர் ஏற்க மறுத்தார்.

அதன்பின் பஸ்ஸில் ரகளையில் ஈடுபட்ட நாகர்கோவில் பயணிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் அதில் ஒரு பயணி டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது தெரியவந்தது. பின்னர் இரு பயணிகளையும் அழைத்து தகராறு ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் நாடு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் அனுமதி இல்லாமல் 1 டு1, பைபாஸ் ரைடர் என சட்டத்தை மீறி பல்வேறு பெயர்களில் இயக்கப்படும் பஸ்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை தொடர்ந்து பொது மக்களிடையே அடிக்கடி மோதலும் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் உருவாகி வருகிறது.

இதனால் போக்குவரத்து ஊழியர்கள் மன அழுத்தத்தால் நிம்மதியின்றி வேலை செய்து வருவதாகவும் புலம்புகின்றனர். நிர்வாக திறமையின்மையால் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தங்கள் இஷ்டம் போல செயல்படுவதால் போக்குவரத்து கழகம் பாதிப்படைந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன என்றும், இதனை அடுத்து வரும் 29 தேதியன்று காங்கிரஸ் கட்சி சார்பிலும், அதனைத் தொடர்ந்து நான்குநேரி டவுன் பஞ்., கவுன்சிலர் அனைவரும் சட்டத்தை மீறி, தன்னிச்சையாக நான்குநேரி பைபாசில் இயக்கப்பட்டு வரும் அனைத்து அரசு பஸ்களையும் நான்குநேரி ஊருக்குள் திருப்பி விடும் போராட்டத்தை அறிவித்துள்ளனர் என தெரிவிக்கின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…

2 hours ago

தறிகெட்டு ஓடும் ‘டிராகன்’…மொத்த வசூல் இத்தனை கோடியா.!

காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…

2 hours ago

டி.ராஜேந்திரனுக்கு என்ன ஆச்சு…ஆளே அடையாளம் தெரியல..வைரலாகும் போட்டோ.!

டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…

4 hours ago

வெறி நாய் கடிக்கு சிகிச்சை எடுத்த இளைஞர் உயிரை மாய்த்த சோகம் : கோவை அரசு மருத்துவமனையில் ஷாக்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…

4 hours ago

பாக்ஸ் ஆபீஸ் சம்பவம் ரெடி மாமே…வெளிவந்த குட் ‘பேட் அக்லி’ அப்டேட்.!

பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…

4 hours ago

விஜய்யிடம் பேசுவது இல்லை.. அவர் படத்தை பார்ப்பதும் இல்லை : பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்!

நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…

5 hours ago

This website uses cookies.