பொதுத்தேர்வு நடக்கும் சமயத்தில் அரசு பேருந்துகள் மெத்தனம்.. பேருந்தை சிறைப்பிடித்த பொதுமக்கள் ஆத்திரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2024, 1:30 pm

பொதுத்தேர்வு நடக்கும் சமயத்தில் அரசு பேருந்துகள் மெத்தனம்.. பேருந்தை சிறைப்பிடித்த பொதுமக்கள் ஆத்திரம்!!

கோவை மதுக்கரை அருகே திருமலையாம்பாளையம்,பாலத்துறை, நாச்சிபாளையம், மதுக்கரை மார்க்கெட், கும்மிட்டிபதி இதனை சுற்றி பல கிராமங்கள் உள்ளன.

இங்கு காந்திபுரத்தில் இருந்து அரசு பேருந்துகள் இயங்கி வந்தன. இந்நிலையில் கலந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்தும், முறையாக பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல், சரிவர பேருந்துகளை இயக்காமலும் போக்குவரத்து நிர்வாகம் இருந்து வந்து உள்ளனர்.

இதனால் அப்பகுதி பள்ளி மாணவ – மாணவிகள், அலுவலகங்கள் செல்லும் பணியாளர்கள் மற்றும் கூலி பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாகவும், இது குறித்து அப்பகுதி தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை போக்குவரத்து கழகத்திற்கு மனு அளித்தும் கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்கில் இருந்து வந்துள்ளதாக கூறி இன்று காலை 7:30 மணிக்கு அங்கு வந்த அரசு பேருந்துகளை சிறை பிடித்து தி.மு.க உறுப்பினர் உட்பட பகுதி பொதுமக்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 225

    0

    0