மாணவிகளை ஆபாசமாக திட்டும் அரசு பள்ளி ஆசிரியை… கொதித்தெழுந்த பெற்றோர் : பள்ளிக்கு பூட்டு போட்டு எதிர்ப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan8 December 2022, 2:46 pm
மாணவ மாணவிகளை ஆபாசமாக பேசி தாக்கியதாக ஆசிரியை பணி நீக்கம் செய்யக்கோரி பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் வேடசந்தூர் அருகே அழகாபுரியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 155 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இங்கு தலைமை ஆசிரியர் உள்பட எட்டு ஆசிரியர் ஆசிரியைகள் பணி செய்து வருகிறார்கள். இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு பாடம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியை ஜெயந்தி என்பவர் மாணவ மாணவிகளை ஆபாச வார்த்தைகள் பேசி கடுமையாக தாக்கியதாக கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு வட்டாரத் தொடக்கப்பள்ளி அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதை கண்டித்து மாணவ மாணவிகளுடன் ஆசிரியை பணி நீக்கம் செய்யக்கோரி பள்ளிக்கு பெற்றோர்கள் பூட்டு போட்டு போராட்டம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடந்ததை தொடர்ந்து பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.
இன்று பெற்றோர்கள் போராட்டம் நடந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியை பள்ளிக்கு வராததை தொடர்ந்து ஜோஸ்பின் சகாயம் மேரி என்ற தலைமை ஆசிரியை யிடம் விசாரித்த போது, அந்த ஆசிரியை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் விருப்ப ஓய்வு எடுத்துக் கொள்ள துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளித்தார்