குடிபோதையில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. சேலம் அரசுப் பள்ளியில் அட்டூழியம்!

Author: Hariharasudhan
27 November 2024, 6:45 pm

சேலம் அரசுப் பள்ளி ஒன்றில் குடிபோதையில் வந்த ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் இருப்பாளி அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும், இங்கு பிரகதீஸ்வரன் என்பவர் தற்காலிக தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்று உள்ளது. அப்போது தமிழ் ஆசிரியர் பிரகதீஸ்வரன், மது போதையில் சிறப்பு வகுப்புக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. அதோடு, அவர் ஒரு மாணவியிடம் ஆபாசமாகப் பேசியது மட்டுமல்லாமல், பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டு உள்ளார்.

Salem school student sexual assault by teacher

பின்னர் வீட்டுக்குச் சென்ற மாணவி, இது குறித்து பெற்றோரிடம் கூறி அழது உள்ளார். இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரகதீஸ்வரனை கைது செய்து உள்ளனர்.

இதையும் படிங்க: 2 attempt தோல்வி.. 3வது முயற்சியில் காதல் கணவனைக் கொன்ற மனைவி!

தொடர்ந்து, நேற்று தற்காலிக ஆசிரியர் பிரகதீஸ்வரன் பணி நீக்கமும் செய்யப்பட்டு உள்ளார். மேலும், இது தொடர்பான அறிக்கை மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அரசுப் பள்ளியில் மதுபோதையில் வந்த ஆசிரியர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  • fear was more when doing ajith project அஜித் சார் படம்,பயம்தான் அதிகமா இருந்தது- ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்…
  • Close menu