அரசுப் பள்ளி மாணவிகள் திடீர் சாலை மறியல்.. செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அடிக்க பாய்ந்த டிஎஸ்பி : பழனியில் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan17 October 2022, 12:59 pm
பழனி அரசு பள்ளி மாணவிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலைமறியல் சம்பவத்தை படம் பிடித்த செய்தியாளர்களை படம் பிடிக்க கூடாது எனக்கூறி பழனி காவல்துறை டிஎஸ்பி சிவசக்தி தாக்க முயன்றதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சத்யா நகரில் அரசு ஆதிதிராவிட நலத்துறை மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாக எழுந்த பிரச்சினையில் அதே பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விடுதி கண்காணிப்பாளர் அமுதா என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அமுதாவையே மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் எனக்கோரி இன்று விடுதி மாணவிகள் பதாகைகளை ஏந்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் இந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவிகளின் சாலை மறியல் போராட்டத்தை செய்தியாளர்கள் படம் பிடித்தனர்.
அப்போது ஆவேசம் அடைந்த பழைய டிஎஸ்பி சிவசக்தி படம் பிடிக்கக் கூடாது எனக் கூறி செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி ஆவேசமடைந்த டிஎஸ்பி சிவசக்தி அங்கு படம் பிடித்துக் கொண்டிருந்த செய்தியாளரை தாக்க முயன்றார்.
இதனால் அங்கு கடும் பத்திரிக்கையாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மற்ற போலீசார் டிஎஸ்பியை சமாதானம் செய்தனர்.
அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், போராட்டத்தை கைவிட பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய டிஎஸ்பி, போராட்டத்தை செய்தியாக வெளியிடும் பத்திரிகையாளர்கள் மீது ஆவேசம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
0
0