திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூல்.? பகீர் கிளப்பிய பிஸ்மி.. “முட்டாள்” என திருப்பூர் சுப்ரமணியம் பதிலடி..!

Author: Rajesh
14 ஜூன் 2022, 7:37 மணி
Quick Share

ஆந்திர மாநிலம் போல் திரையரங்கு டிக்கெட் விற்பனை மற்றும் முன்பதிவு ஆகியவற்றை ஒழுங்குமுறைபடுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதனிடையே, ஆந்திராவில் திரைப்படங்களுக்கான டிக்கெட் விற்பனையை அரசு இணைதளம் மூலம் மட்டுமே செயல்படுத்த வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்தது. அதற்காக 2% மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் அந்த முறை இன்னும் முழுமையாக அமலுக்கு வரவில்லை.

இந்த நிலையில் இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, இந்தியாவில் திரைப்பட டிக்கெட்களை Book My Show, ticket new, paytm போன்ற Nodal Agency இணைதளங்கள் மூலம்  முன்பதிவு செய்யலாம். இதற்காக அந்த நிறுவனங்கள் GSTயுடன் சேர்த்து ஒரு டிக்கெட்டிற்கு 35 ரூபாய் வசூலிக்கின்றன.

இது மக்களிடம் கொள்ளையடிக்கும் செயல் கூறுகின்றார்.தொடர்ந்து பேசிய திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், பிஸ்மி முட்டாள்தனமாக பேசுகிறார். திரையரங்கு உரிமையாளர்கள் மீது வீண் பழியை போடுகிறார் என கடுமையான கண்டனங்களை தெரிவித்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 563

    0

    0