கோவையில் தேர்தல் பறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.எஸ்.கருவி: தேர்தல் அதிகாரிகள் தகவல்..!!

Author: Rajesh
2 February 2022, 9:16 am

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படை வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி மற்றும் 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் என மொத்தம் 41 நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சிதேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட 26ம் தேதி மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்குவந்து விட்டதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் விதமாக மண்டலம் தோறும் பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படைகள் கோவை மாநகராட் சிக்குட்பட்ட 5 மண்டலங்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி கள் கூறுகையில் , கேர்வை மாவட்டத்தில் 72 பறக்கும் படை வேட்பாளரு யினர் உள்ளனர் . இவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் இந்த பறக்கும் படை வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட உள்ளது அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்தனர் .

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!