பேரூரில் பிரம்மாண்ட தர்ப்பண மண்டபம் : நல்லறம் அறக்கட்டளை சார்பில் அரசிடம் ஒப்படைத்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி!
Author: Udayachandran RadhaKrishnan5 February 2025, 7:57 pm
கோவை பேரூர் நொய்யல் ஆற்றக்கரை படித் துறையில் கோவை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் தங்கள் மூதாதைகளுக்கு தர்ப்பனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மழைக் காலங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, படித்துறைக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் தர்பணம் செய்யும் இடமும் மழை நீரால் சூழப்படுவதாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.
இதையும் படியுங்க: 8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. 5 முதியவர்கள் உள்பட 7 பேர் கைது.. சிவகங்கையில் அதிர்ச்சி!
இந்நிலையில் கடந்த 2019 – ல் நல்லறம் அறக்கட்டளை சார்பில் பேரூர் நொய்யல் ஆற்றின் அருகே இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய தர்பன மண்டபம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது.
பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று புதிய தர்பன மண்டபம் இந்து சமய அறநிலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் , இந்து அறநிலையத் துறை துணை ஆணையர் ரமேஷ் மற்றும் உதவி ஆணையர் விமலா ஆகியோருடன் ஒப்படைத்தனர்.
முன்னதாக தர்பன மண்டபத்தில் சிறப்பு யாகம் செய்யப்பட்டது. தர்பன மண்டபம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும் போது : கடந்த 2020 ஆம் ஆண்டு நான் அமைச்சராக இருந்த பொழுது இந்த தர்பன மண்டப பணியை தொடங்கினோம்.
நாங்கள் ஆட்சியில் இருந்த போது நிறைய கோவில்கள் கும்பாபிஷேகம் செய்தோம். 100 ஆண்டுகளாக இந்த இடம் பெரிய பிரச்சினையாக இருந்தது. அரசியலுக்கு அப்பாற்பட்டு நிறைய பேர் உதவியாக இருந்தனர். எத்தனையோ செய்ய முடியாத நிகழ்ச்சிகளையும் செய்து முடித்தோம்.
அப்போது மத்திய அரசிடம் இருந்து போதிய நிதி முழுமையாக வரவில்லை. இருந்தாலும் நாங்களாக நிதி ஒதுக்கி பணியை செய்தோம். இந்த தர்ப்பண மண்டப பணிகள் பலரின் உறுதுணையோடு முடிக்கப்பட்டது. நல்லறம் அறக்கட்டளை சார்பில் கொரோனா காலகட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு உணவு அளித்தோம்.
கோவில்கள் மட்டுமின்றி பல பணிகளை செய்து உள்ளோம். நான் அமைச்சராக இருந்த போது நொய்யலுக்கு ரூ.240 கோடி ஒதுக்கி பணிகள் இன்றும் நடைபெற்று வருகிறது. நொய்யலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். ரூ.15 கோடி செலவில் இந்த மண்டப பணிகள் நடைபெற்று உள்ளது. எனவே இதனை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.
நான் அமைச்சராக இருந்த போது நிறைய பேருந்து நிறுத்தங்கள் கட்டி கொடுத்தோம். அதனை சுத்தம் செய்து கூட்ட கூட செய்வதில்லை. எனவே தூய்மையாக பராமரிக்க வேண்டும். இந்த மண்டபத்தில் பொதுமக்களுக்கு சிரமமின்றி குறைந்த கட்டணத்தில் சேவைகள் செய்து தர வேண்டும் என தெரிவித்தார்.