இரவிலே நடந்த இரண்டு சம்பவங்கள்.. ‘சந்திரபாபு நாயுடு இதனை விவாதிக்க வேண்டும்’.. ஆந்திராவில் அதிர்ச்சி!
Author: Hariharasudhan12 December 2024, 3:27 pm
தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மாமனார் உறவை கொலை செய்த நபர் வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அன்னமயா: ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டம் ஓபுலவாரிபள்ளி மண்டலத்துக்கு உட்பட்ட கொத்தமாங்கம்பேட்டையில் குட்டா ஆஞ்சநேயுலு (59) என்ற மாற்றுத்திறனாளி இருந்தார். இந்த நிலையில், இவர் கடந்த சனிக்கிழமை கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, போலீசார் இதனை சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், புதிய மாங்கம்பேட்டையைச் சேர்ந்த பிரசாத் – சந்திரகலா தம்பதிக்கு 12 வயதில் மகள் உள்ளார். ஆனால், சிறுமியின் பெற்றோர் குவைத்தில் தங்கி பணிபுரிந்து வந்தனர்.
இதனால் இவர்களது 12 வயது மகளை அதே கிராமத்தில் வசித்து வந்த சந்திரகலாவின் தங்கையான லட்சுமி – வெங்கடரமணா தம்பதியின் வீட்டில் தங்க வைத்தனர். இந்த நிலையில், கடந்த வாரம் வீட்டில் சிறுமி தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது வெங்கடரமணாவின் தந்தை ஆஞ்சநேயுலு, தனது பேத்தி வயதான சிறுமியின் வாயில் துணியை வைத்து அழுத்தி உள்ளார்.
தொடர்ந்து அவர் சிறுமியை பாலியியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். ஆனால், சிறுமியின் சத்தம் கேட்டு லட்சுமி வந்து உள்ளார். பின்னர், சிறுமி நடந்த விவரங்களை லட்சுமியிடம் கூறியுள்ளார். ஆனால், இதுகுறித்து யாருக்கும் சொல்ல வேண்டாம் எனக்கூறி அந்த சிறுமி, தாய் சந்திரகலாவிற்கு சாதாரணமாக போன் செய்து மகளை அழைத்துச் செல்லும்படி கூறி உள்ளார்.
இதையும் படிங்க: இறுக்கி மூடிய போர்வை.. 6 கண்களில் தெரிந்த ரத்த வெறி.. இன்ஸ்டாவால் நடந்த கொடூரம்!
எனவே, உடனடியாக சந்திரகலா குவைத்தில் இருந்து வீட்டிற்கு மகளை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், தனது தங்கை லட்சுமிக்கு போன் செய்து கேட்ட நிலையில், அதற்கு அவர் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் கவலையடைந்த சந்திரகலா, தனது மகளிடம் நிதானமாக அருகில் அமரவைத்து கேட்டு உள்ளார்.
அப்போது, சிறுமி தனக்கு நேர்ந்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரகலா, ஓபுலவாரிப்பள்ளி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, வெங்கடரமணா லட்சுமி மற்றும் ஆஞ்சநேயலுவை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், அவர்களைக் கண்டித்து அனுப்பி வைத்தனர்.
இதன் பிறகு லட்சுமி, தனது உறவினர்களுக்கு போன் செய்து தனது மாமனார் நடந்து கொண்ட விதம் குறித்து போலீசாருக்கு பணம் கொடுத்து அழைத்து வந்ததாக கூறி வந்துள்ளார். இதனால் சந்திரகலா தனது மகளுக்கு நடந்த சம்பவத்தையும், தவறு செய்தவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் அப்படியே அனுப்பிவிட்டதாக தனது கணவர் பிரசாத்திடம் தெரிவித்தார்.
இதனால் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி பிரசாத் கூறியதால், போலீசில் சந்திரகலா புகார் அளித்தார். போலீசார் லட்சுமியை அழைத்ததால், லட்சுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் போலீசார் சந்திரகலாவை உன்னால் தான் லட்சுமி தற்கொலை முயற்சி மேற்கொண்டார், அவருக்கு எதாவது நடந்தால் உன் மீது வழக்கு தொடர்வேன், குவைத்திற்குச் செல்ல முடியாது என மிரட்டி உள்ளனர்.
பின்னர் லட்சுமி உடல் நலம் தேறியதால், சந்திரகலாவை அனுப்பி வைத்தனர். பின்னர் சந்திரகலா குவைத்திற்குச் சென்று கணவரிடம் நடந்த விவரங்களைக் கூறினார். இதனால் மனம் உடைந்த பிரசாத் 4 நாட்கள் விடுமுறையில் யாருக்கும் சொல்லாமல் இந்தியா வந்து, ஆஞ்சநேயலு வீட்டிற்கு சனிக்கிழமை இரவு சென்று தூங்கிக் கொண்டுருந்த ஆஞ்சநேயலுவை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்துவிட்டு யாருக்கும் தெரியாமல் மீண்டும் குவைத் சென்று உள்ளார்.
ஆனால் ஆஞ்சநேயலு எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று தெரிய வேண்டும் என்பதாலும், பெண் பிள்ளைகள் மீது கை வைத்தால் அவரது தந்தையோ, அண்ணனோ, தம்பியால் இதுபோன்ற நிலை ஏற்படும் என்ற பயம் தவறு செய்பவர்களுக்கு இருக்க வேண்டும் எனக்கூறி நடந்த விவரங்களுடன் விளக்கமளித்து, பிரசாத் வீடியோ பதிவு செய்து, தவறு செய்தேன் அதற்குண்டான தண்டனை சட்டப்படியை நான் ஏற்கத் தயாராக உள்ளேன்.
அதற்காக விரைவில் இந்தியா வந்து போலீசில் சரண் அடைவதாகவும், இந்த வீடியோவை முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அனைத்து ஊடகத்தினரும் இதுபோன்ற சம்பவத்திற்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் போன்ற விவாதம் நடத்த வேண்டும் என பிரசாத் வீடியோவை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.