வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பைக்குள் புதைந்து மூதாட்டி பலி : லாரியில் இருந்து குப்பைக் கொட்டும் போது பரிதாபம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2022, 4:38 pm

கோவை : வெள்ளலூர் குப்பை கிடங்கில் லாரியில் இருந்து குப்பை கொட்டும் போது 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி குப்பையில் புதைந்து உயிரிழந்தார்.

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் இருந்து நாள்தோறும் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

நூற்றுக்கணக்கான லாரிகளில் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் நாள்தோறும் கொட்டப்பட்டு வரும் நிலையில் இன்று குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துக் கொண்டிருந்த மூதாட்டி மீது லாரியில் இருந்த குப்பை கொட்டி அதில் மூதாட்டி புதைந்து பலியானார்.

வெள்ளலூர் குப்பை கிடங்கில் தனியார் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 70 பேர் பிளாஸ்டிக் மற்றும் தொட்டிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக இன்று அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்த போது லாரியிலிருந்து குப்பை கொட்டி அதில் மூதாட்டி மீது குப்பை முழுவதுமாக விழுந்து குப்பையில் புதைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து சக ஊழியர்கள் தகவல் தெரிவித்தன் அடிப்படையில் குப்பையிலிருந்து மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போத்தனூர் காவல்துறையினர் வெள்ளலூர் குப்பை கிடங்கில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1372

    0

    0