கடன் வாங்கி கொடுத்த பணத்தை கேட்ட பாட்டி…கழுத்தை அறுத்துக்கொல்ல முயன்ற பேரன் கைது: கோவையில் அதிர்ச்சி..!!
Author: Rajesh15 May 2022, 11:05 am
கோவை: கொடுத்த பணத்தை கேட்ட பாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற பேரனை போலிசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வபுரம் அடுத்துள்ள தெலுங்கு பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞர் சரியாக வேலைக்கு போகாமல் ஊர் சுற்றிவந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வீட்டு செலவிற்கு பணம் கேட்டு பாட்டி மீனாவிற்கு தொல்லை கொடுத்ததால் வட்டிக்கு பணம் வாங்கி கார்த்திக்கு கொடுத்துள்ளார் பாட்டி மீனா.
இந்நிலையில் தொடர்ந்து சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றி திறிந்தது மடுமல்லாமல், பாட்டி வாங்கி கொடுத்த கடனுக்கும் பணம் கொடுக்காமல் வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் 14ம் தேதி மதியம் உணவருந்த வந்த கார்த்தியிடம் வட்டிக்கு வாங்கிகொடுத்த பணத்தை கேட்டுள்ளார்.இதில் பாட்டிக்கும், பேரனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கார்த்தி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதில் வலிதாங்க முடியாமல் அலறிய மீனாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கழுத்தில் காயமடைந்த மீனாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் காவல் நிலைய போலிசார் பாட்டியின் கழுத்தை அறுத்த பேரன் கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு கார்த்தியை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
பணம் கடன் வாங்கிகொடுத்த பாட்டியின் கழுத்தை அறுத்த பேரனின் செயலால் அப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது.