பாட்டியை கட்டையால் அடித்து கொலை செய்த பேரன் : விசாரணையில் ஷாக்… குமரியில் அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 April 2023, 9:10 pm

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலவிளை பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி தங்கப்பழம் ( 78). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர்.

அனைவருக்கும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார்கள்.அதே வேளையில் 2-வது மகள் அதே பகுதியில் வசித்து வருகிறார்.

இவரது மகன் சஜின்( 25 ). இவர் மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்று தகராறு செய்வது வழக்கம். அவ்வப்போது வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடி வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை சஜின் பக்கத்தில் உள்ள பாட்டி தங்கப்பழம் வீட்டிற்கு சென்றார்.அங்கு மீண்டும் பாட்டியிடம் தகராறில் ஈடுபட்டார். அவரை பாட்டி கண்டித்தார்.

இதில் ஆத்திரமடைந்த சஜின், வீட்டில் இருந்த ஓடு மற்றும் மரக்கட்டையால் பாட்டி தங்க பழத்தை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த தங்கபழம் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அதற்குள் தங்க பழம் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாப மாக இறந்தார். இது குறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள்.

பிணமாக கிடந்த தங்க பழத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சஜினை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.. விசாரணையில் சஜின் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 431

    0

    0