திமுக அமைச்சருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு.. திருச்சி அருகே ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan20 மே 2024, 2:44 மணி
திமுக அமைச்சருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு.. திருச்சி அருகே ஷாக்!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் மகன் ரக்ஷித்(19). இவர் திருச்சி மாவட்டம் இருங்கலூர் அருகே உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் டி.ஆர்.பி பொறியியல் கல்லூரியில் பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கி படித்துவந்தார்.
இந்நிலையில் கல்லூரி விடுமுறை தினம் என்பதால் நேற்று மதியம் 3 மணி அளவில் உடன் பயிலும் விடுதி நண்பர் 10 பேருடன் காணக் கிளியநல்லூர் கிராமத்தில் உள்ள நந்தியாறு தடுப்பணை அருகே நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு அவர்களுக்கு சொந்தமான 80 அடி ஆழம் உள்ள கிணற்றில் நண்பர்கள் 10 பேர் குளித்துக் கொண்டிருந்தனர்.
ரக்ஷித்துக்கு நீச்சல் தெரியாது என்பதால் கிணற்றின் விளிம்பு பகுதியில் உட்கார்ந்திருந்தால் அப்போது எதிர்பாராத விதமாக ரக்ஷித் கால் இடறி கிணற்றின் ஆழமான பகுதியில் விழுந்து நீரில் மூழ்கினார்.
இதனால் பதறிப்போன அவரது நண்பர்கள், ரக்ஷித் தேடிய போது கிடைக்கவில்லை. இதனால் அவரது நண்பர்கள் ஊருக்குள் போய் நடந்ததை அப்பகுதி மக்கள் மற்றும் காணக்கிளியநல்லூர் காவல் நிலையம் சென்று சொன்னார்கள்.
அதனைத் தொடர்ந்து புள்ளம்பாடி மற்றும் லால்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர் கிணற்றில் 65 அடி ஆழம் தண்ணீர் இருந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
மேலும் தகவல் அறிந்த லால்குடி டிஎஸ்பி ரகுபதி ராஜா தாசில்தார் ஆகியோர் தேடுதல் பணியை துரிதப்படுத்தினார்.
5 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின் மாயமான ரக்ஷித்தை சடலமாக மீட்டெடுத்தனர். இது தொடர்பாக கணக்கியநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: போலீஸ் கஸ்டடிக்கு கிரீன் சிக்னலா? மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர்.!
நண்பர்கள் கண் எதிரே ரக்ஷித் தண்ணீரில் மூழ்கிப் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0
0