லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு கிரீன் சிக்னல்… அமலாக்கத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல் ; நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2023, 3:59 pm

லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு கிரீன் சிக்னல்… அமலாக்கத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல் ; நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!

திண்டுக்கல்லில் கடந்த 1ம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் சுரேஷ்பாபுவிடம் ரூ 20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மதுரையைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவரிடம் இருந்து லஞ்ச பணம் 20 லட்சம் மற்றும் லஞ்சம் வாங்க பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து 15 மணி நேர விசாரணைக்கு பின்பு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி திருமதி மோகனா முன்பு ஆஜர் படுத்தப்பட்டு வருகின்ற 15.12.23 வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விவேக் பாரதி மனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பான வழக்கு 05.12.23 விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து இன்று 12 12.2023 லஞ்ச ஊழலில் ஈடுபட்ட அதிகாரியை விசாரிக்க 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் .

நேரில் ஆஜார்படுத்தப்பட்ட அங்கித் திவாரியை விசாரித்த, நீதிபதி மோகனா , லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 நாட்கள் காவலில் வைத்து விசாரணை செய்து வரும் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!