நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்: கோவை ஆயுதப்படை காவலா்கள் ஒன்றிணைந்து நிதியுதவி அளித்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

Author: Rajesh
17 March 2022, 10:44 am

கோவை: ராணுவ பணியின் போது உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு கோவையை சேர்ந்த ஆயுதப்படை காவலா்கள் ஒன்று சேர்ந்து பணம் வசூல் செய்து நிதியுதவி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆயுத படையில் முதல்நிலை காவலராக பணிபுரிபவர் பாபு . சமூக ஆா்வலரான இவா் தன்னுடன் பணிபுரியும் சக காவலர்களிடம் பணம் வசூல் செய்து காவலர்களின் குடும்பம் மற்றும் ஏழை, எளியோருக்கு அவ்வப்போது உதவி செய்து வருகின்றார்.

முக்கியமாக காவல் துறை மற்றும் ராணுவத்தில் பணியாற்றும் போது உயிா் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக, நண்பா்கள் மற்றும் சக காவலா்களை ஒருங்கிணைத்து உதவும் கரங்கள் என்ற குழு அமைத்து அதன் மூலமாக உதவிகள் செய்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இராணுவத்தில் பணியாற்றி வந்த தருமபுாி மாவட்டம் பாலக்கோடு கம்மாளப்பட்டி பகுதியை சோ்ந்த பூபதி என்ற வீரர் விபத்தில் உயிரிழந்தார். இதே போல எல்லை பாதுகாப்பு படையில் வேலை பார்த்த
திருவண்ணாமலை மாவட்டத்தை சோ்ந்த பிரகாஷ் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்நிலையில் ஆயுதபடை காவலர் உயிரிழந்த இரு வீரர்களின் குடும்பத்திற்காக சக காவலர்கள் மற்றும் நண்பர்களிடம் நன்கொடை வசூல் செய்தார். இரண்டு லட்சம் ரூபாய் நிதி திரட்டிய நிலையில், இன்று கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் சார்பாக இரு குடும்பத்தினரிடமும் நிதி உதவியினை காவலர் பாபு வழங்கினார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா லட்சம் வீதம் உதவி தொகையானது வழங்கப்பட்டது.

இதுவரை ராணுவ வீரா் அல்லது காவல்துறையினா் உயிா் இழந்தால் சம்பந்த பட்ட துறையினா் மட்டுமே நிதி திரட்டி வழங்கி வந்த நிலையில் , ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரியும் வீரர்களுக்காக கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் இணைத்து உதவி இருப்பது குறிப்பிட தக்கது. கோவை ஆயுதபடை காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் இணைந்து மனிதநேயத்துடன் நாட்டுக்காக உயிர் இழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 1283

    0

    0