கதற விட்ட பா.ம.க.. பதற்றத்தில் குடியாத்தம் குமரன் : வீட்டை சுற்றி போலீஸ் குவிப்பு.!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2024, 7:45 pm

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன் நகரில் வசித்து வருபவர் குடியாத்தம் குமரன். இவர் திமுக முன்னாள் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.

இதனிடையே கடந்த ஆண்டு குடியாத்தம் குமரனை கட்சியிலிருந்து நீக்கி திமுக தலைமை அறிவித்தது. இதனையடுத்து குடியாத்தம் குமரன் பல்வேறு சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் யூடுப் போன்றவற்றில் திமுகவிற்கு ஆதரவாகவும் எதிர்கட்சித் தலைவர்களை விமர்சித்தும் வீடியோ பதிவு செய்து வருகிறார்.

இதனிடையே பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் குறித்து குடியாத்தம் குமரன் அவதூறாக வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

இதனையடுத்து பாமக மாவட்ட தலைவர் ரவி தலைமையில் 50 க்கும் மேற்பட்ட பாமகவினர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் குறித்து அவதூறாக பேசிய குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்

இதனால் குடியாத்தம் காவல் நிலையத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடியாத்தம் குமரன் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • income tax department sent notice to empuraan director prithviraj பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…