குஜராத்தும் மோசம், தமிழகமும் மோசம்.. CM கொடைக்கானல் விசிட் பற்றி விமர்சிக்க மாட்டேன்.. செல்லூர் ராஜூ தாக்கு!
மதுரை புறவழிச்சாலை உள்ள போக்குவரத்து கழகத்தின் தலைமையகம் முன்னர் அண்ணா தொழிற் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நீர், மோர் வழங்கும் நிகழ்வை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு கூறுகையில் “அரசு பேருந்துகளில் உதிரி பாகங்களை ஒட்டுனர்கள், நடத்துநர்கள் தங்களுடைய சொந்த செலவில் மாற்ற போக்குவரத்து கழக நிர்வாகம் நிர்பந்தம் செய்கிறது, கடினமான பணிகளை அதிமுக தொழிற்சங்க ஓட்டுநர்களுக்கும், எளிமையான பணிகளை திமுக மற்றும் கூட்டணி கட்சியை தொழிற்சங்க ஓட்டுநர்களுக்கும் நிர்வாகம் வழங்குவது கண்டிக்கத்தக்கது, விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆளும் திமுக அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை.
மழை வெள்ள பேரிடர் காலத்திலும், கடுமையான வெயில் நிலவும் காலத்திலும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. திமுக அரசிற்கு மக்களின் பலம் தேவையில்லை எனவும், கூட்டணி கட்சிகளின் பலம் போதுமானது என நினைக்கிறது,
முதலமைச்சர் கொடைக்கானலில் கூலாக இருந்து விட்டு வரட்டும், முதலமைச்சர் குடும்பத்துடன் மேற்கொண்டுள்ள பயணச் குறித்து விமர்சனம் செய்ய மாட்டோம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோடநாடு பயணம் குறித்து கலைஞர் விமர்சனம் செய்தார். அத்தகைய முறையில் நாங்கள் முதலமைச்சர் பயணம் குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை.
மேலும் படிக்க: புதிய உச்சத்தை தொட்ட ஜிஎஸ்டி வசூல்… மலைக்க வைத்த ஏப்ரல் மாத Collection : பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு!
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது, மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது, போதைப் பொருள் நடமாட்ட விவாகரத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் விதமாக காவல்துறையினர் போதை பொருள் விவகாரத்தில் கண்டும், காணாதுமாக உள்ளனர்.
போதைப் பொருள் நடமாட்ட விவகாரத்தில் உளவுத்துறை நுண்ணறிவுத்துறை செயலிழந்து விட்டது, போதை பொருள் நடமாட்ட விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்தியளவில் போதைப்பொருள் பயன்பாட்டு தளமாக குஜராத்தும், தமிழக அளவில் தமிழ்நாடும் விளங்குகிறது, போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்
…
முன்னாள் அமைச்சரை மிரட்டிய திமுக பிரமுகர்!
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் விஜய் கண்ணன் மிரட்டல்
அதிமுக தேர்தல் பணிமனைக்குள் நுழைந்து தங்கமணியை மிரட்டிய வீடியோ வைரல் : வாக்காளர்களுக்கு ரூ.1000 திமுக கொடுத்ததாக தகவல் பரப்பியதாக கூறி மிரட்டல்
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
This website uses cookies.