இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் தனிப்படை போலீசார் திடீர் சோதனை… 2 துப்பாக்கிகள் பறிமுதல்.. கோவையில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
29 March 2023, 10:53 am

கோவை : கோவை புலியகுளம் பகுதியில் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தியதில் 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள மசால் லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் அய்யோத்தி ரவி. இவர் இந்து முன்னணி அமைப்பில் பொறுப்பில் இருந்துள்ளார். இந்த நிலையில் இவர் துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் உதவி ஆணையாளர் சதீஷ் தலைமையில் வந்த தனிப்படை போலீசார், ரவி வீட்டில் ஒன்றரை மணி நேரமாக தீவிர சோதனை மேற்கொண்டனர். மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த சோதனையில் தனிப்படை போலீசார் ரவி வீட்டில் இருந்து இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், இந்த துப்பாக்கி பறிமுதல் தொடர்பாக அயோத்தி ரவியை ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!