காஞ்சியில் பிரபல ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்த ரூ.15 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு : குளங்களையும் மீட்ட அரசு அதிகாரிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2022, 5:09 pm

பிரபல ஏ ப்ளஸ் ரவுடி படப்பை குணா ஆக்கிரமிப்பு செய்திருந்த சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபல ஏ ப்ளஸ் ரவுடி படப்பை குணா கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்து வருகின்றார்

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை தலைமையில் போலீசார் படப்பை குணாவை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக சமூக வலைய தலங்களில் வைரலாக பரவி வந்தது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே மதுரமங்கலம் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நீர்வடி கால்வாயில் 5 ஏக்கர் நிலத்தை சுமார் 12 ஆண்டுகளாக ரவுடி குணா ஆக்கிரமித்திருந்தார்.

மாவட்ட நிர்வாகத்துக்கு வந்த தகவலின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் அந்த அரசு நிலம் மீட்கப்பட்டது.

இந்த இடத்தின் தற்போதைய சந்தை விலை சுமார் 15 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி படப்பை குணா மீது கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், வழிப்பறி என 42 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 8566

    0

    0