பண்ணாரி அம்மன் கோவிலில் நாளை குண்டம் திருவிழா : பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2023, 2:29 pm

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது பண்ணாரி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த குண்டம் திருவிழாவிற்கு தமிழக மட்டுமல்லாது அண்டை மாநிலமான கர்நாடக மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர்.

இந்நிலையில் நாளை குண்டம் திருவிழா நடைபெறுவதை ஒட்டி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

மேலும் குண்டம் திருவிழாவின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க காவல்துறையினர் சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் நேரில் ஆய்வு செய்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி