கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குடிபெயரும் குரு : குருபெயர்ச்சியை முன்னிட்டு 12 அடி உயர குருபகவான் சிலைக்கு அபிஷேகம்!!
Author: Udayachandran RadhaKrishnan14 April 2022, 10:40 am
குருபெயர்ச்சியை முன்னிட்டு புதுச்சேரி மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சனீஸ்வரபகவான் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள 12 அடி உயர குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குரு பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு புதுச்சேரி மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சனீஸ்வர பகவான் கோவிலில் எழுந்தருளியுள்ள 12 அடி உயரமுள்ள குரு பகவானுக்கு அபிஷேக பொடி, மஞ்சள், அரிசி மாவு, 1008 லிட்டர் பால், தயிர்,விபூதி,தேன் பல வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து குரு பகவானுக்கும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விடியற்காலை 4.16க்கு கும்ப ராசியில் இருந்த குரு பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவானுக்கு பல்வேறு தீபாராதனை காட்டப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.