ரிஷப ராசிக்கு இடம்பெயர்ந்தார் குருபகவான்… எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை தெரியுமா..?

Author: Babu Lakshmanan
1 May 2024, 6:53 pm

குருபெயர்ச்சியையொட்டி தமிழகத்தின் பிரசித்தி பெற்ற குரு தலம் மற்றும் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் இன்று மாலை 5.19 மணிக்கு இடம்பெயர்ந்தார். குரு பெயர்ச்சியையொட்டி பிரசித்தி பெற்ற குரு பகவான் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குரு பரிகார கோவில்களில் சிறப்பு யாகமும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன. பல்வேறு ராசிக்காரர்கள் சிறப்பு பிரார்த்தனை மற்றும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் காலை முதலே கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்த ஆண்டு மேஷம், கன்னி, விருச்சகம், மகரம் ஆகிய நான்கு ராசிக்கும் நேரம்மிக சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க: அரசு பேருந்தில் திடீரென கிளம்பிய புகை… அலறியடித்து ஓடிய பயணிகள்… பழுதுபார்ப்பு உதிரி பாகங்கள் இல்லாததால் ஓட்டுநர் அவதி..!!!

அதேபோல, ரிஷபம், மிதுனம், கும்பம், மீனம், துலாம், தனுசு, சிம்மம், கடகம் ஆகிய ராசிக்காரர்கள் நிச்சயம் பரிகாரம் செய்ய வேண்டும். குறிப்பாக, குரு வழிபாடு செய்தால், நற்பலன்களையும் பெறுவார்கள். மேலும் ஆலங்குடி குருபகவான் கோயிலுக்கு சென்று வரலாம். மேலும் வாரம் வாரம் குரு பகவானை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!