ரயிலில் கேட்பாரற்று கிடந்த குட்கா பறிமுதல் : போலீசார் விசாரணை
Author: kavin kumar23 February 2022, 1:22 pm
திருச்சி : திருச்சி வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 42 கிலோ குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையினர் திருச்சி வரும் ரயில்களில் சிறப்பு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சையில் இருந்து திருச்சி வந்த ரயிலில் உதவி ஆய்வாளா் வீரக்குமார், தலைமையில் காவலா்கள் ரெயில் பெட்டிகளிலும் சோதனை செய்தனா். அப்போது ஒரு பெட்டியில் உள்ள கழிவறைக்கு முன்பு கேட்பாரற்று கிடந்த பிளாஸ்டிக் பையை கைப்பற்றினார்கள். அந்த பையை சோதனை செய்தபோது அதில். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள் என சுமார் 16.500 கிலோ இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து ரயிலில் வந்த பயணிகளிடம் விசாரிக்கையில் அவர்கள் யாரும் அந்த பையை தங்களது இல்லை என்று தெரிவித்ததால், காவல்துறையினர் பையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி குப்பனார்பட்டி, பெரியபட்டி என்று விலாசத்தை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 56 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதேபோல் இராமேஸ்வரத்தில் இருந்து வாராணசி விரைவு ரயில் திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திற்கு வந்தபோது ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில்,
அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பவுடா் வடிவில் ஒரு பெட்டிக்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பரிசோதித்தபோது சுமார் 26 கிலோ எடை கொண்ட புகையிலை பவுடா் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவற்றை ரயில்வே பாதுகாப்பு படையினா் அவற்றை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.