வேட்டைக்காரன் பாடலை வைத்து விஜயை மடக்கிய எச்.ராஜா.. மகனையும் விட்டுவைக்கவில்லை!

Author: Hariharasudhan
17 February 2025, 4:01 pm

ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும் நீ தாய்மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும் என்ற விஜய் பட பாடலை எச்.ராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “நடிகரும் தவெக தலைவருமான விஜய் அவர்கள் வேட்டைக்காரன் என்கிற ஒரு திரைப்படத்தின் முதல் பாடலில் தனது மகன் ஜேஸன் சஞ்சய் அவர்களோடு நடனமாடி இருப்பார்.

அந்த பாடலில் பள்ளிச் சிறுவர்கள் கூட்டத்தின் மத்தியில் நின்று … ” ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும் நீ தாய்மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும்” என்று பாடுவார். தமிழக மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும் என்று தன் மகனோடு நடனமாடி பாடிய அவர்தான்…

தன் மகன் ஜேஸன் சஞ்சய் அவர்களை தமிழ்வழி சமச்சீர் பள்ளியில் சேர்க்காமல் மும்மொழி கல்வி போதிக்கும் சென்னை “அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூலில்” சேர்த்து படிக்க வைத்திருக்கிறார். ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும் என்று பாடி இருக்கிறாரே தவெக தலைவர் விஜய் அவர்கள்…

H Raja about TVK Vijay

அவர் விருப்பபடி அரசு பள்ளிகள் எல்லாம் ஆக்ஸ்போர்ட் போல அவருடைய மகன் ஜேஸன் சஞ்சய் பயின்ற அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல் போல கல்வித் தரத்தில் உயர வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு தான் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

அதை புரிந்து கொள்ளாமல் அவர் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது ஏன் என தெரியவில்லை. அவர் மகனை மும்மொழி கல்வி போதிக்கும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துவிட்டு அவருடைய ரசிகர்கள் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் தமிழக குழந்தைகள் அனைவருக்கும் அதே தரத்திலான மும்மொழி கல்வியை மத்திய அரசு வழங்குவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காரில் பெட்டியொடு சுற்றுகிறேன்.. என்ன அது? சீமான் பரபரப்பு பேச்சு!

முன்னதாக, நேற்று தவெக தலைவர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.

ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்” என தெரிவித்திருந்தார்.

  • Bharathiraja son Manoj death பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!