விஜய்க்கு ஒரு கேள்வி.. கடுப்பான எச்.ராஜா!

Author: Hariharasudhan
17 February 2025, 11:25 am

விஜயின் குழந்தைகள் மாநகராட்சிப் பள்ளிகளிலா படிக்கிறது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில், மத்திய பட்ஜெட் 2025 விளக்க பொதுக் கூட்டம், சுந்தரபுரம் சங்கம் வீதியில் நடைபெற்றது. இதற்கு, பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.சந்திரசேகர் தலைமை தாங்கினார். மேலும், இந்த பொதுக் கூட்டத்தில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும், முன்னாள் மாவட்டத் தலைவர் கே.வசந்தராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, “மத்திய பட்ஜெட்டில் வீரத் தமிழச்சி நிர்மலா சீதாராமன் சிக்ஸர் அடித்து உள்ளார். விவசாயிகள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிகம் பட்ஜெட்டில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் இருந்த பயிர்க்கடனை, ஐந்து லட்சம் கோடி ரூபாய் வரை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. தமிழகத்தில் பொழுது போகவில்லை என்பதால், மொழிப் பிரச்னையை முதலமைச்சர் ஸ்டாலின் கையில் தூக்கி பேசிக் கொண்டு இருக்கிறார்.

H Raja about TVK Vijay

இது போன்று பேசுவதற்கு தமிழக முதலமைச்சருக்கு வெட்கம் இருக்காதா? இந்தி உங்களுக்கு பிரச்னையாக இருந்தால், உங்கள் சன் சைன் பள்ளியில் மாணவர்களுக்கு இந்தி சொல்லித் தரக்கூடாது. முதலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

1 முதல் 8 வரையில் உள்ள மாணவர்களை மாற்றுவதற்கு முடியவில்லை என்றால், எதற்கக அமைச்சராக இருக்க வேண்டும்? நீங்கள் நடத்தும் பள்ளியில் இந்தி இருக்கலாம், ஆனால், ஏன் அரசுப் பள்ளியில் இந்தி இருக்கக் கூடாது? ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் நீண்ட நாளாக கிடப்பில் உள்ளது.

கேரளா சென்ற முதலமைச்சர், ஏன் இதைப் பற்றி பேசவில்லை? அதேபோல், கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதியில் 20 ஆயிரம் வீடுகள் உள்ளன. அந்தப் பகுதி மக்கள் வெளியே வர முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. அந்த குப்பைக் கிடங்கால், நுரையீரல் தொற்று, மார்பக புற்றுநோய் போன்ற வியாதிகளால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: இறங்க மறுக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

ஏப்ரல் முதல் கோவை மாநகராட்சிக்கு இப்பகுதி மக்கள் யாரும் வரி கொடுக்க மாட்டார்கள். தவெக தலைவர் விஜய் பிள்ளைகள் எங்கு படிக்கிறது? சமச்சீர் பள்ளியிலா? மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை மட்டும் வேறு மொழி படிக்காதே என்கிறார்கள்.

இருமொழிக் கொள்கையை ஆதரிப்பவர்கள், நாளை காலை அவர்களது குழந்தைகளை மாநகராட்சிப் பள்ளியில் சேருங்கள். எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கைக்கு தடையில்லை. விஜய் குழந்தை, ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் குழந்தைகள் வெளிநாட்டில் படித்துக் கொண்டு உள்ளனர். அவர்களை, இங்கு கொண்டு வந்து மாநகராட்சிப் பள்ளியில் படிக்க வையுங்கள்” எனக் கூறினார்.

  • Bharathiraja son Manoj death பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!