மீண்டும் பெரியார் குறித்து கொச்சை பேச்சு… சர்ச்சையை கிளப்பிய ஹெச் ராஜா!!
Author: Udayachandran RadhaKrishnan15 January 2025, 4:43 pm
பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் வீடு முற்றுகையிடப்படும் என தபெதிக தலைவர் ராமகிருட்டின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியார் அவர்களை இழிவுபடுத்தி கடலூரில் சீமான் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் பேசியதற்கு ஆதாரம் கேட்டு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் பதிவான போதும் ஆதாரம் கொடுக்காமல் தொடர்ந்து பெரியார் அவர்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார்*
தமிழர்களுக்கு தன்மானத்தை ஊட்டிய பெரியாரை சீமான் இழிவுபடுத்துகிற செயல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மன வேதனையையும், கொந்தளிப்பையும் உண்டாக்கி வருகிறது.
இதையும் படியுங்க: அலங்கோலமாக கிடந்த சப் – இன்ஸ்பெக்டர் : கதவை திறந்த மனைவிக்கு காத்திருந்த ஷாக்!
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் சீமானுக்கு கண்டனம் தெரிவித்த பின்னரும் பெரியார் பற்றி அவதூறு பரப்புவதை சீமான் நிறுத்திக் கொள்ளாத காரணத்தால்,பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் வருகின்ற 22/01/2025 புதன் காலை 10 மணி அளவில் சென்னை நீலங்கரையில் உள்ள சீமானின் வீட்டை ஆயிரக்கணக்கானோர் திரண்டு முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது.
எனவே பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து இயக்கங்களும்,தமிழ்நாடெங்கும் உள்ள பெரியார் பற்றாளர்களும்,தமிழின உணர்வாளர்களும் அவசர அழைப்பாக ஏற்றுக்கொண்டு, இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, ஈ.வெ.ரா சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்த தேசவிரோதி. வெள்ளை அரசின் கைக்கூலி. தமிழை காட்டுமிராண்டி மொழி என்ற தமிழ் மொழியின் எதிரி. விலை மாதர்களுடன் காவிரி ஆற்றங்கரையில் கூத்தடித்த ஒழுக்கக் கேடர். ஈ. வெ.ரா. வின் போலி பிம்பம் தகர்கப்பட்டால் மட்டுமே தமிழன் தலை நிமிர முடியும் என பதிவிட்டுள்ளார்.