ஆண்டவன் இருக்கான் குமாரு.. திராவிடியன் ஸ்டாக் கவனிக்க : ஹெச் ராஜா போட்ட பதிவு!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2025, 10:26 am

நடப்பாண்டு, கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மற்றும் தான் சார்ந்த லிபரல் கட்சியின் தலைவர் பதவியை ஜஸ்டீன் ட்ரூடோ ராஜினாமா செய்துள்ளார். இதனை, கனடா மக்களின் நலனுக்காகவும், ஜனநாயகத்தின் மாண்புக்காகவும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மார்ச் 24ஆம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைக்குமாறு அந்நாட்டின் கவர்னர் ஜெனரலுக்கு ட்ரூடோ வலியுறுத்தி உள்ளார்.

இதனிடையே இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் இந்தியாவுக்கும் தொடர்பு உள்ளதாக கனடா பிரதமர் குற்றம்சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இந்தியா – கனடா உறவில் விரிசல் எழுந்தது.

இதையும் படியுங்க: யார் இந்த அனிதா ஆனந்த்? கனடா புதிய பிரதமர் ரேஸில் தமிழக வம்சாவளி!

இதனால் ஒட்டுமொத்த இந்தியாவே ட்ரூடோவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தது.மேலும் அமெரிக்க போன்ற நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறியிருந்தது. இந்த நிலையில் ட்ரூடோ ராஜினாமா செய்தது உலக நாடுகளிடையே பேசு பொருளாகியுள்ளது.

H raja Criticized Dravidian Stock in Canada Pm Resign Issue

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, மாண்புமிகு இந்திய பிரதமர் மற்றும் இந்தியாவிற்கு எதிராக ஆட்டம் போட்டவர் நிலை. இங்குள்ள திராவிடியன் ஸ்டாக் கவனிக்க. ஆண்டவன் இருக்கான் குமாரு என பதிவிட்டுள்ளார்.

  • Kovai Sarala Talked About Vadivelu வடிவேலு கூட நடிக்கணும்னா அதை பண்ணியே ஆகணும்.. நான் அனுபவிச்ச வேதனை : கோவை சரளா ஓபன் டாக்!
  • Views: - 32

    0

    0

    Leave a Reply