இனி ‘அந்த’ திட்டத்தை பற்றி CM எதுவுமே பேசக்கூடாது.. ஹெச் ராஜா திடீர் எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2024, 8:22 pm

மதுரை ரேஸ் கோர்ஸ் காலனியில் உள்ள பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா வருகை தந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், மதுரை கிண்டியில் அரசு மருத்துவமனையில் பணியாற்றம் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளியின் மகனால் கொலை எரித்தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.

இதுதான் திராவிட மாடல் அரச.? புரோட்டா கடையில் சண்டை போடுவது..? பியூட்டி பார்லரில் சண்டை போடுவது.? ஒவ்வொரு புற்று நோய்க்கு ஏற்ற சிகிச்சை அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் பள்ளிகளில் போதை பழக்க வழக்கம் அதிகரித்துள்ளது. நம் வீட்டுப் பிள்ளைகளின் புத்தகப் பைகளை தினசரி சோதனை செய்ய வேண்டும் என பெற்றோருக்கு எண்ணம் வந்துவிட்டது. கொல்கத்தாவில் நடைபெற்றது போன்று தமிழ்நாட்டிலும் அரங்கேறி வருகிறது.

H raja Warning CM Stalin

இது போன்ற நிகழ்வினால் இனி வரும் காலங்களில் மருத்துவர்கள் உயிர்காப்பு சிகிச்சைகளுக்கு மருத்துவம் அளிக்க மாட்டோம் என கூறிவிட்டால் என்ன செய்வது.?

பாஜக அப்ளிகேஷன் போட்டு இருக்கா அல்லது வாசலில் போய் நின்று இருக்கிறோமா நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

இதையும் படியுங்க: Grindr செயலியால் வந்த வினை.. இளைஞர்களுக்கு கூரியரில் வந்த பார்சல் : அதிர வைத்த சம்பவம்!

கூட்டணி குறித்து எந்த கருத்தும் நான் கூற மாட்டேன் மத்திய தலைமை பதினாறு மூத்த தலைவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதை செயல்படுத்தும் இடத்தில் நான் உள்ளேன் இவற்றை கருத்தை சொல்ல மாட்டேன். புதிய கூட்டணி குறித்து மத்தியில் உள்ள தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சராக இருக்கிறார்களா.? இல்லையா..? இது என்னுடைய கேள்வி இது திராவிட மாடல்களின் அயோக்கியத்தனம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக இருக்கிறார்கள். எனவே முதல்வர் இது போன்ற பொய் செய்தியை பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்