தவெக மாநாட்டுக்குச் சென்ற நபர் மாயம் – கோர்ட்டில் போலீசார் திடுக்கிடும் தகவல்!

Author: Hariharasudhan
10 December 2024, 5:51 pm

தவெக மாநாட்டுக்குச் சென்ற தனது மகனை கண்டுபிடித்து தருமாறு அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த புஷ்பநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் (Madras High Court) ஆட்கொணர்வு மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கடந்த அக்டோபர் 27ஆம் தேதி அன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு எனது மகன் மேகநாதன் சென்றார்.

ஆனால், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. எனவே, மாயமான எனது மகனை கண்டுபிடித்துக் கொடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (டிச.10) விசாரணைக்கு வந்தது.

A man missing when going to Vijay TVK Maanaadu

அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், “மாயமான மனுதாரரின் மகனை சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறினார்.

A man missing while going to Vijay TVK Maanaadu in Madras High Court case

அது மட்டுமல்லாமல், இந்த விசாரணை தொடர்பான நிலை அறிக்கையையும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாக்கல் செய்தார். தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். இந்த வழக்கு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மனைவியின் விபரீத ஆசை.. கணவன் கண்முன்னே சிதைந்து போன குடும்பம்!

முன்னதாக, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு (TVK Maanaadu) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை என்னும் கிராமத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமர் 8 லட்சம் பேர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

  • Alanganallur Jallikattu highlights அலங்காநல்லூரில் கெத்து காட்டிய சூரியின் காளை…உதயநிதி கொடுத்த ரியாக்ஷனை பாருங்க..!