Hair Clip-ஐ விழுங்கிய மூன்று வயது குழந்தை… அறுவை சிகிச்சை இன்றி 10 நிமிடத்தில் வெளியே எடுத்த மருத்துவர் ; வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
3 July 2023, 11:45 am

நாகை அருகே மூன்று வயது குழந்தையின் இரைப்பையில் சிக்கிய கிளிப்பை அறுவை சிகிச்சை இன்றி 10 நிமிடத்தில் வெளியே எடுத்து மருத்துவர் சாதனை படைத்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் – கீதா தம்பதியினர். தமிழரசன் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சனா என்கிற 3 வயது குழந்தை உள்ளது.

இந்த நிலையில், நேற்று மதியம் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, தான் அணிந்திருந்த ஹேர் கிளிப் ஒன்றை வாயில் வைத்து கடித்துக் கொண்டிருந்த நிலையில், அந்த ஹேர் கிளிப்பை குழந்தை விழுங்கியுள்ளது. இதனையடுத்து ,சிறிது நேரத்தில் குழந்தை வாந்தி எடுத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, உடனடியாக வீட்டிற்கு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் எக்ஸ் ரே எடுக்குமாறு கூறியுள்ளார். எக்ஸ் ரே எடுத்து பார்த்தபோது, இரைப்பையில் ஹேர் கிளிப் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, திருவாரூர் ஜவுளிக் காரத் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அங்குள்ள மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார். பெற்றோர்கள் அங்கு குழந்தையை அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து, தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் சுந்தர் என்பவர் குழந்தையை பரிசோதித்து விட்டு மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் ஸ்டாலின் உதவியுடன், அறுவை சிகிச்சையின்றி என்டோஸ் கோபி மூலம் குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் இன்றி குழந்தையின் இரைப்பையில் உள்ள ஹேர் கிளிப்பை பத்து நிமிடங்களில் அகற்றியுள்ளார்.

  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 456

    0

    0