ரஜினியின் ‘தலைவர் 169’ படத்தில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா. ? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

Author: Rajesh
12 June 2022, 12:41 pm

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களை அதிகமாக பெற்றதால் பெரிய வசூலை குவிக்க தவறியது.

அப்படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே அப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த தகவல் தொடர்ந்து வெளியாகியபடி இருக்கின்றன.

மேலும் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்திதது. இதனால் நெல்சன் தலைவர் 169 பட கதையில் கவனமாக இருந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தலைவர் 169 படத்திற்காக பயன்படுத்த படவுள்ள பழைய மாடல் கார் ஒன்றின் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. மேலும் ஏற்கனவே இப்படம் ஜெயில் குறித்த திரைப்படமாக உருவாகும் சொல்லப்பட்ட நிலையில் தற்போது இந்த காரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம். ஒருவேல இது உண்மை என்றால், அப்போ இந்த படத்துல பெரிய சம்பவம் நடக்க போகுது போல என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!