அங்க பாதி.. இங்க பாதி : வாகனங்களுக்காக வளைந்து நெளிந்து அரையுங்கொரையுமாக போடப்பாட்ட தார் சாலை..!!

Author: Udayachandran RadhaKrishnan
22 September 2022, 5:53 pm

கோவை கவுண்டம்பாளையம் அருகே எருக்கம்பெனி பகுதியில் புதிதாக போடப்பட்டு வரும் தார் சாலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மின் மயான வாகனங்களுக்காக வலைந்து நெழிந்து போட்டுள்ளனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலை தற்போது புதிதாக போடும் பணிகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வருகின்றன. இரவு நேரங்களில் மட்டும் நடக்கும் இப்பணிகள் அதிகாலை வரை நடக்கிறது.

இதில் கவுண்டம்பாளையம் அருகே எருக்கம்பெனி பகுதியில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் அப்பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கு பழுதடைந்த மின் மயான வண்டி மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகளை அப்புறப் படுத்தாமல் சாலை போடும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் அந்த வாகனம் நிற்கும் பகுதியில் சாலை வாகனங்களுக்கு தகுந்தாற்போல் வலைந்து நெழிந்து போட்டுள்ளனர். சாலை பணிகளை மேற்கொள்ளும் முன் அந்த இடங்களில் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றிவிட்டு சாலைகளை போட்டால் பயனுள்ளதாக இருக்கும் என வாகன ஒட்டிகள் தெரிவித்தனர்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!