மோடி கொடுத்த அல்வா.. நிதியை கேட்டால் மரியாதை கேட்கிறார்கள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொதிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2024, 7:33 pm

மோடி கொடுத்த அல்வா.. நிதியை கேட்டால் மரியாதை கேட்கிறார்கள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொதிப்பு!

உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வரிப்பங்கீடு குறித்து பதிவிட்டுள்ளார். மோடி கொடுத்த அல்வா என்றும் என்ற கேப்சனுடன் பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு ரூ.6 லட்சம் கோடி வரி கொடுத்துள்ள போதும், ரூ.1.58 லட்சம் கோடியை மட்டுமே வரிப்பகிர்வாக ஒன்றிய அரசு திருப்பிக் கொடுத்துள்ளது. ஆனால், ரூ.3.41 லட்சம் கோடி வரி கட்டிய உத்தர பிரதேசத்துக்கு கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் கோடி வரிப்பகிர்வை வாரி வழங்கியுள்ளார்கள்.

தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியைக் கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள். மாண்புமிகு, மரியாதைக்குரிய, பிரதமர் அவர்களே, மத்திய நிதியமைச்சர் அவர்களே இப்போதாவது சொல்லுங்கள் நாங்கள் யாருடைய மரியாதைக்குரிய தகப்பனார் வீட்டு பணத்தை கேட்டோம்? உங்கள் ஆட்சியின் கடைசி காலத்திலாவது, எங்களுக்கு நியாயமாக சேர வேண்டிய நிதிப்பகிர்வை தந்திடுங்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி