ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி திடீரென தீக்குளிக்க முயற்சி ; கல்யாணம் இல்ல… வேலையும் இல்ல… விரக்தியில் விபரீதம்!!

Author: Babu Lakshmanan
9 January 2023, 4:49 pm

கரூரில் வேலை கிடைக்காத விரக்தி மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி செந்தில் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திடீரென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி எரிந்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

தாய், தந்தை இல்லாமல், திருமணமும் ஆகாமல் ஆதரவற்ற நிலையில் உள்ள சூழ்நிலையில், பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருந்தும், இதுவரை வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அரசு மற்றும் தனியார் துறை சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பல சான்றிதழ்கள் பெற்று வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்தும், இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…