அந்த மிருகங்களை தூக்கில் போடுங்க… புதுச்சேரி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பிரபல நடிகர் போட்ட பதிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 March 2024, 6:31 pm

அந்த மிருகங்களை தூக்கில் போடுங்க… புதுச்சேரி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பிரபல நடிகர் போட்ட பதிவு!!

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பாதுகாப்பு கருதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை முடித்து போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர். மேலும், நீதிபதி இளவரசன் சிறை வளாகத்திற்கு சென்று கைது செய்யப்பட்டவர்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.பின்னர் 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்களை வரை கடும் கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், நடிகர் ஜெயம் ரவி தனது X தளப்பக்கத்தில் , அந்த மிருகங்களை தூக்கிலிடுங்கள் என கொந்தளித்துள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு ஏராளமானோர் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!