அனுமன் ஜெயந்தி : விஸ்வரூப ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த கோவை ஸ்ரீ அஷ்டாம்ஸவரத ஆஞ்சநேயர்!
Author: Udayachandran RadhaKrishnan30 December 2024, 11:04 am
கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ஸவரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று காலை 8 மணி அளவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அப்போது ஆஞ்சிநேயர் விஸ்வரூப ராஜ அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பொது மக்களுக்கு அருள் பாலித்து காட்சியளித்தார்.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடைபெற்றது. உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம், பிரம்மாண்டமான அபிஷேகம்,நாம சங்கீர்த்தன பஜனை நடைபெற்றது.
பக்தர்கள் இன்று அதிகாலை முதலே ஆஞ்சநேயர் கோவிலில் வந்து சிறப்பு பூஜை அபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.