சீன மொழியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து : ராக்கெட் விளம்பர சர்ச்சையில் பாஜக உள்குத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2024, 2:55 pm

சீன மொழியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து : ராக்கெட் விளம்பர சர்ச்சையில் பாஜக உள்குத்து!!

கடந்த 27-ம் தேதி பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். கடந்த 28-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பாட்டினத்தில் இஸ்ரோவுக்கான புதிய ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சி தொடர்பாக திமுக சார்பில் நாளிதழ்களில் கொடுத்த விளம்பரம் சர்ச்சையானது.

நாளிதழில் கொடுத்த விளம்பரத்தில் ராக்கெட்டில் சீனக் கொடி இருந்து பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. இதனை பிரதமர் மோடி முதல் அண்ணாமலை வரை பலரும் விமர்சித்திருந்தனர். இந்திய அறிவியலையும், இந்திய விண்வெளித்துறையையும் திமுகவினர் அவமதித்துவிட்டனர் என்று கூறிய பிரதமர் மோடி அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய ஸ்டாலின், அண்ணா, கருணாநிதி, பெரியார் ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடியும் தனது X வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக பாஜகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. ஆனால் சீன மொழியில் வாழ்த்து தெரிவித்து சீண்டியுள்ளது. தமிழக பாஜக X வலைதள பதிவில் “ முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிடித்த சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். முதலமைச்சர் நீண்டநாள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?