ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் ,வ.உ.சி நகர் பகுதி சேர்ந்தவர் அருண்(33) இவர் தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சலீமா பீ(31) இ வர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து 8 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார்
இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2ஆம் மாதம் சலீமா பீ வீட்டு வேலை செய்வதற்காக துபாய் சென்றுள்ளார் . தனது உறவினர் பெண் அங்கு உள்ள காரணத்தினால் ஏஜண்ட் மூலமாக துபாய் புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு சலீமா பீ செல்போன் வாயிலாக அருணை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது பேசிய அவர் தான் தற்போது ஓமன் பகுதியில் உள்ளதாகவும் இங்கு தன்னை தகாத வார்த்தைகள் பேசி அவமானப்படுத்துவதாகவும் சிலர் தன்னை தாக்குவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனை அடுந்த அருண் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் இது குறித்து தன் மனைவியை மீட்டு தர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று சலீமா பி வீடியோ ஒன்றை பதிவு செய்து தனது கணவரான அருணுக்கு அனுப்பியுள்ளார். அதில் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் தன்னால் பணியாற்ற முடியவில்லை எனவும் தெரிவித்த அவர் தன்னிடம் இருந்த செல்போனை பிடுங்கி வைத்துள்ளதாகவும் அசிங்கமாக பேசி அவமானப்படுத்துவதாகவும் அடித்து துன்புறுத்துவதாகவும் 2 லட்ச ரூபாய் தருமாறு மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தான் உண்பதற்கு உணவு குடிக்க தண்ணீரும் கூட இல்லாத நிலையில் உள்ளதாகவும் தன்னால் தொடர்ந்து பணியாற்ற முடியாது தன்னை எப்படியாவது இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு கண்ணீர் மல்க தெரிவித்து இருந்தார்
மேலும் படிக்க: சாவர்க்கர் குறித்து அவதூறு பேச்சு.. ராகுல் காந்திக்கு மீண்டும் சிக்கல்.. விரைவில் சம்மன்?!
அதன் அடிப்படையில் அருண்குமார் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தன் மகனுடன் வந்து தன் மனைவியை மீட்டுத் தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மனு வழங்கினார் மேலும் தன் மனைவியை மீட்டு தர மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.