பிரபல நடிகரின் மனைவிக்கு ஆபாச தொல்லை…இன்ஸ்டாகிராமில் அந்தரங்க வீடியோக்களை அனுப்பிய நபர்: கொதித்தெழுந்த நடிகர் செய்த செயல்..!!
Author: Rajesh25 April 2022, 11:12 am
சென்னை: பிரபல நடிகரின் மனைவிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மர்ம நபர்கள் ஆபாச படங்களை அனுப்பி தொந்தரவு செய்வதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.
நடிகை தேவயானியின் சகோதரர் நகுல். இவர் பாய்ஸ் படத்தில் அறிமுகமானார். பின்னர் மாஸ் என்கிற மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை, வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கிட்டாரிஸ்ட் அன இவர் பின்னணி பாடகரும் கூட. தற்போது இவர் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு நடுவராக இருந்து வருகிறார். இவர் தன்னுடன் படித்த ஸ்ருதியை காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகிரா என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது, ஸ்ருதி 2வது முறையாக கர்ப்பமாக உள்ளார்.
இருவரும் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார்கள். நகுல் தனது மனைவி தண்ணீர் தொட்டியில் குழந்தை பெற்றுக் கொள்ளும் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டார். வலியில்லாமல் சுகப்பிரசவம் மேற்கொள்ளும் இந்த முறை மெல்ல மெல்ல நம் நாட்டிலும் பரவி வருகிறது. பெரும்பாலானோர் இதை விரும்புகிறார்கள்.

அது போல் நகுலின் மனைவி ஸ்ருதி தனது குழந்தைக்கு பால் குடிக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பலர் ஆபாச கருத்துகளை பதிவிட்டனர். அது போல் ஸ்ருதி தான் போடும் கருத்துகளுக்கு மாறாக கிண்டல் செய்து போஸ்ட் போடுவோருக்கு பதிலடி கொடுத்து வந்தார்.
இந்நிலையில் அண்மைக்காலமாக ஸ்ருதியின் இன்ஸ்டாகிராமுக்கு யாரோ மர்மநபர்கள் சிலர் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளையும் அனுப்பி வருவதாக தெரிகிறது. அது போல் ஆபாச புகைப்படங்களையும் போலி கணக்குகளில் இருந்து அனுப்பி வருகிறார்களாம்.
இதனை ஸ்ருதி பல முறை கண்டித்தும் அவர்கள் அனுப்புவதை நிறுத்தவில்லை. இதனால் கொதித்தெழுத்த ஸ்ருதி, பெண்களின் ஆடை மற்றும் ஒழுக்கத்தை பற்றி எப்போதும் தவறான கருத்துகளை பதிவிடுகிறார்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். எனினும் தொடர்ந்து ஆபாச புகைப்படங்களும் வீடியோக்களும் வருவதை அடுத்து இது குறித்து ஸ்ருதி போலீஸில் புகார் அளித்துள்ளார்.