டென்னிஸ் வீரர் நடாலுக்கு உருவாக்கப்பட்ட வாட்ச்.. இப்போ ஹர்திக் கையில் : விலை இத்தனை கோடியா?!
Author: Udayachandran RadhaKrishnan25 February 2025, 4:28 pm
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்ட்ர் ஹர்திக் பாண்டியா அடிக்கடி பேசு பொருளாக உலா வருகிறார். தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அவர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
அதே சமயம் சாம்பியன்ஸ் டிராபியில் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் பாராட்டை பெற்றது. அந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஹர்திக் விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையும் படியுங்க : கணவரை இழந்த நடிகைகளுடன் டேட்டிங் : பிரபலத்தின் அந்தரங்க லீலைகள் அம்பலம்!
ஒரு புறம் ஹர்திக் அனல் பறக்க, மறுபுறும் ஹர்திக் காதலி என கூறப்படும் பாடகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
போட்டியின் போது ஹர்திக் கட்டிய வாட்ச் தான் தற்போது வைரலாகி வருகிறது. அவர் கட்டிய வாட்ச் விலை உயர்ந்த ரிச்சர்ட் மிலே ஆரம் 27 – 02 மாடலை சேர்ந்து.
இந்த வாட்ச் உலகத்திலேயே வெறும் 50 வாட்சுகள் தான் உள்ளன. குறிப்பாக டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடாலுக்காக உருவாக்கப்பட்டது.
வாட்ச் பிரியரான ஹர்திக் பாண்டியா, ₹6.92 கோடி கொடுத்து இந்த வாட்சை வாங்கியுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், 2015ல் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட பாண்டியா தனது உழைப்பால் இந்தியாவையே மிரள வைத்துள்ளார் என குறிப்பிட்டு வருகின்றனர்.
..