வேட்புமனுவின் போது குதிரை… வாக்கு சேகரிப்பின் போது ஆர்மோனியப் பெட்டி : பாட்டு பாடி வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2022, 2:34 pm

கோவை : கோவையில் ஆர்மோனிய பெட்டி வாசித்தும், பாட்டு பாபாடியும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி 32வது வார்டு கண்ணப்ப நகர் பகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் மகேஸ்வரன். இன்று முதல் அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவர் முதல் நாளான இன்று ஆர்மோனிய இசை கருவியை வாசித்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆர்மோனிய பெட்டியை வாசித்தபடி வீடுதோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் தான் வெற்றி பெற்றால் அப்பகுதியில் உள்ள குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து தருவேன் என்றும் முக்கியமாக அப்பகுதியில் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து தருவேன் எனவும் தெரிவித்தார். இவர் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்பொழுது குதிரையில் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…