மக்கள் உணவில் நஞ்சு கலப்பதா? ஜவ்வரிசியில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை : அமைச்சர் அன்பரசன் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2022, 9:41 pm

ஜவ்வரிசியில் கலப்படம் செய்யும் உற்பத்தியாளர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரித்துள்ளார்.

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள் மற்றும் கண்காணிப்பு குழுக்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது:- சேகோ தொழிற்சாலையில் உள்ள பிரச்சனைகளை உற்பத்தியாளர்கள் சரி செய்து கொள்ள வேண்டும். உற்பத்தியாளர்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.

இதுவரை செய்தது போல் இனியும் தவறு செய்ய அரசு அனுமதிக்காது. ஜவ்வரிசியில் கலப்படம் செய்யும் உற்பத்தியாளர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சில வடமாநில மக்களுக்கு ஜவ்வரிசி தான் உணவாக உள்ளது. மக்களின் உணவில் நஞ்சு கலப்பது தவறு என்பதை உணர்ந்து தரமான ஜவ்வரிசியை உற்பத்தி செய்ய வேண்டும்.

ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை சரி செய்ய அரசு தயாராக உள்ளது. இதற்காக உற்பத்தியாளர்கள் தவறு செய்ய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 436

    0

    0