ராஜபக்சேவுடன் பேசிய ஆடியோ நிறையா இருக்கு : அண்ணாமலை விமர்சனத்துக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் சவால்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2022, 2:13 pm

திருச்சி : ராஜபக்சே உடன் பேசிய ஆடியோ நிறைய இருக்கு என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் புது குண்டை வீசியுள்ளார்.

திருச்சியில் நடைபெறும் தட்சிண ரயில்வே எம்ளாயீஸ் யூனியன் (DREU) மாநாட்டில் பங்கேற்க வந்த மதுரை மா.கம்யூ., எம்.பி., வெங்கடேசன், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தின், மாநிலத்தின் உரிமை சார்ந்த விஷயத்தை பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு மேடையிலேயே பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், முதல்வரின் கோரிக்கைகளுக்கு விரைவில் பிரதமர் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.

கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக- காங்கிரஸ். அதை பாஜக மீட்க வேண்டுமா? என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்காரா?” என்ற கேள்விக்கு, “பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களின் உரிமைக்காக இவர்கள் எவ்வளவு எல்லை மீறிப் போயிருக்கிறார்கள் என்பது பின்னோக்கி சென்று பார்த்தால் தெரியும்.

அதற்காக சட்டத்தை வளைத்தும், சட்டங்களை புதிதாக உருவாக்கியும் இருக்கிறார்கள்.
அதேபோல, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்ட நாள் கனவு. அதை தற்போது அதிகாரத்தில் உள்ள பாஜக மீட்டுத் தர வேண்டும்” என்றார்.

“ராஜபக்சே உடன் பேசிய ஆடியோவை வெளியிடுவேன்” என்று அண்ணாமலை கூறியிருக்கிறாரே?” என்ற கேள்விக்கு, “நிறைய ஆடியோக்கள் இருக்கு என்கிறார்கள். அத்தனையும் வெளியே வரட்டும். வந்தபின்பு கேட்டுவிட்டு சொல்கிறேன்” என்றார்.

“இலங்கை தமிழர்களின் முதல் எதிரியே திமுக தான் என்று அண்ணாமலை குற்றம்சாட்டுகிறாரே..?” என்ற கேள்விக்கு, “காமெடி பண்ணாதீங்க பாஸ்..” என்றார்.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?