விவாகரத்து செய்தவரின் தங்கையுடன் காதல் : கார் பேனட்டில் தொங்கியபடி முன்னாள் கணவனை போலீசில் சிக்க வைத்த அக்கா… சினிமாவை மிஞ்சிய காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2022, 5:56 pm

விழுப்புரம் : சினிமா பட பாணியில் தனது கணவருடன் சென்ற தங்கையை காரின் முன்பக்க பேனட்டை பற்றி கொண்டு சென்று மீட்ட அக்காவால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் உக்கடத்தினை சார்ந்த விஜயபானுவிற்கும் திருவேற்காட்டினை சார்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் பத்து வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜயபானுவின் தங்கையான விஜயமஞ்சுவிற்கும் வெங்கடேசும் காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே தனது வாழ்க்கையை சீரழித்தது போன்று தங்கையின் வாழ்க்கையை தனது கணவர் வெங்கடேசன் சீரழித்து விடாக்கூடாது என்பதற்காக திருமணம் ஏற்பாடுகள் பெண்ணின் வீட்டார் செய்து விழுப்புரத்தில் உள்ள தனியார் நகைகடையில் நகை எடுக்க வந்துள்ளனர்.

அப்போது விஜயமஞ்சு நகைகடையிலிருந்து வெளியே வந்து தனது முன்னாள் கணவருடன் செல்வதை கண்ட விஜய பானு விழுப்புரம் சிக்னலில் கணவரின் காரின் முன்பக்க பேனட்டை பற்றி கொண்டு அரை கிலோ மீட்டர் தூரம் செல்லவே பொதுமக்கள் காரினை மறித்து கண்ணாடிகளை உடைத்து மேற்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது காரின் முன்பக்க கதவினை வெங்கடேசின் மனைவி பற்றிக்கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பதபதக்க வைக்கும் சிசிடிவிகாட்சிகளில் காரின் முன்பக்கத்தில் பெண் தொங்கியவாறு செல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ