கடலூர் : காட்டுமன்னார்கோவில் அருகே கள்ள காதல் விவகாரத்தில் கணவனை மனைவி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குச்சிபாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் இளையராஜா(42). இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அனிதா(35). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா – அனிதா இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அனிதா தனது சொந்த ஊரான தஞ்சை அருகே உள்ள நெய்வாசல் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை பார்க்க இளையராஜா நெய்வாசலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அனிதா வீட்டின் பின்புறத்தில் உடல் கிடந்துள்ளது. இதன் பிறகு, போலீசார் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், இளையராஜாவின் மனைவி அனிதாவை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அனிதா தான் இளையராஜாவை கள்ளகாதலுக்காக கொலை செய்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக அனிதா போலீசில் அளித்த வாக்கு மூலத்தில் கூறியது:- இளையராஜாவின் சித்தப்பா மகன் ஜெயபால்(30) என்பவருக்கும், அனிதாவுக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாகவும், இந்த நிலையில் அனிதா வீட்டுக்கு வந்த இளையராஜாவை அனிதாவும், ஜெயபாலும் அம்மிக்கல்லால் கொடூரமாக அடித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனிதாவை கைது செய்ய போலீசார், ஜெய்பாலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
This website uses cookies.