புதுச்சேரி : இந்திய இலங்கை இருநாட்டு மீனவர் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என்றும், மீனவர் நலனில் மத்திய அரசு மிகுந்ர அக்கரையுடன் செயல்படுவதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்டு வருகின்றோம், 2014 க்கு பிறகு துப்பாக்கிச்சூடு போன்ற எந்த சம்பவமும் இதுவரை நடைபெறவில்லை, அந்த அளவிற்கு தமிழக மீனவர்களை மத்திய அரசு பாதுகாத்து வருகின்றது என கூறிய அவர், 70 ஆண்டுகளில் முதன் முறையாக மீனவர்களுக்கு ஒரு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது மட்டுமல்லாமல் இந்த பட்ஜெட்டில் 70% கூடுதல் நிதி மீனவர்களின் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
இந்திய இலங்கை இருநாட்டு மீனவர் விவகாரம் தொடர்பாக மீண்டும் சுமூக பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று முருகன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோது, இது ஒரு ஜனநாயக நாடு எந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். தீண்டாமையை கடைபிடிக்க மாட்டேன் என உறுதிமொழி எடுத்தவர்கள் தான் பாஜகவின் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் திருமாவளவன் மிகுந்த பயத்தில் உள்ளார்.
நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என முயற்சிக்கிறார் என குற்றஞ்சாட்டியவர். பிறமாநிலங்களில் பட்டியலினத்தனர் நிதித்துறை போன்று முக்கிய இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் தமிழகத்தில் பட்டியலினத்தை சேர்ந்த அமைச்சர் கடைசி பட்டியலில் உள்ளார் அதை திருமாவளவன் எதிர்த்து கேட்டிருக்க வேண்டும், ராமாயணமும், மகாபாரதமும் நம் நாட்டின் இதிகாசங்கள் அதைப்பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை என்றவர்,
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு தேசிய நூலான பகவத்கீதை தான் அந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வணங்கிவிட்டுத்தான் மோடி பிரதமராக பதவி ஏற்றுள்ளார் என திருமாவளன் புதுச்சேரியில் நேற்று பேசியதற்கு பதிலளித்த முருகன்,புதுச்சேரியில் பிரதமரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றும், தென் இந்தியாவில் முதன்முறையாக புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவது பெருமை சேர்க்கிறது என்று தெரிவித்துள்ளார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.