என்னை சிறையில் தள்ள கரூர்க்காரர் தான் காரணம் : ஜாமீனில் வெளியான விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2024, 11:37 am
vija
Quick Share

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர்
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை
போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதை அடுத்து அவர் தலைமறைவானார்.

இதனைத் தொடர்ந்து அவரை தேடி வந்த சிபிசிஐடி போலீசார் கடந்த 16-ந்தேதி கேரளாவில் வைத்து கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதைதொடர்ந்து இந்த இரு வழக்குகளிலும் தனக்கு ஜாமீன் வழங்க கோரி கரூர் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது இரு வழக்குகளிலும் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், மறு உத்தரவு வரும் வரை சிபிசிஐடி அலுவலகம் மற்றும் கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை என இரு வேளையிலும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

கரூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து இன்று திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார்.

அவரை முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாணவர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், அதிமுகவினர் மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சிறைச்சாலை சிறைச்சாலை முன்பு திரண்டு வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எம் ஆர் விஜயபாஸ்கர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் என் மீது, 31 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இவை அனைத்தும் அரசியல் சார்ந்த வழக்குகள்.

அதையும்தாண்டி, என்மீது தற்போது ஒரு சிவில் வழக்கை பதிவு செய்து, அதை கிரிமினல் வழக்காக மாற்றி, சிபிசிஐடி விசாரணை என்ற அளவிற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

எனக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைத்துள்ளது. ஜாமீன் கிடைத்து தற்போது வெளியே வந்திருக்கிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். இந்த வழக்கிலிருந்து நிச்சயம் விடுபடுவேன்.

சிபிசிஐடி, போலீஸ் காவலில் நான் இருந்தபோது என்னை யாரும் துன்புறுத்தவில்லை. என்னை மட்டுமல்ல, என்னை சார்ந்த அனைவருமே இந்த வழக்கினால் ஒவ்வொரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு பெரிய குழுவே கடந்த இரண்டு மாதமாக என்னை சிறையில் வைப்பதற்கான வேலையை செய்துள்ளார்கள். உங்களுக்கு நன்றாக தெரியும். இந்த வழக்கை கரூரில் உள்ள யார் செய்ய சொல்லி இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

எனக்கு உறுதுணையாக இருந்தால் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் பெருமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், வழக்கறிஞர்களுக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறையில் இருந்து வெளியே வரும்போது அவரை வரவேற்க வந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கார்களால் திருச்சி – புதுக்கோட்டை சாலையில் பலத்த போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 283

    0

    0